May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

பாலருவி சிறப்பு ரெயில் 4 நாட்கள் பகுதியாக ரத்து

1 min read

palaruvi special train parcialy canceled for 4 days

15/4/2021
பாலருவி சிறப்பு ரெயில் 4 நாட்கள் ரத்து செய்ப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:&
கேரள மாநிலம் ஷோரனூர் அருகே உள்ள வடக்கஞ்சேரி ரெயில் நிலையத்தில் ரெயில் பாதை பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது.
இதன் காரணமாக திருநெல்வேலியிலிருந்து ஏப்ரல் 15, 16, 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் புறப்படும் வண்டி எண் 06791 திருநெல்வேலி – பாலக்காடு பாலருவி சிறப்பு ரெயில் திருச்சூர் – பாலக்காடு ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில் பாலக்காட்டில் இருந்து ஏப்ரல் 16, 17, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய வண்டி எண் 06792 பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி சிறப்பு ரெயில் பாலக்காடு – திருச்சூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.