தமிழகத்தில் கொரோனா பரவல் 10 ஆயிரத்தை தாண்டியது
1 min read
Corona distribution in Tamil Nadu has exceeded 10 thousand
17.4.2021
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று புதிதாக 10,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,91,451 ஆக அதிகரித்துள்ளது.
42 பேர் சாவு
தமிழகத்தில் இன்று 42 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,113 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 5,925 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,07,947 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 70,391 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 3,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக…
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்று கொரோனா பாதிப்பு விவரம் வருமாறு:-
அரியலூர் – 31
செங்கல்பட்டு – 954
சென்னை – 3,304
கோவை – 727
கடலூர் – 183
தர்மபுரி – 115
திண்டுக்கல் – 195
ஈரோடு – 226
கள்ளக்குறிச்சி – 61
காஞ்சீபுரம் – 332
கன்னியாகுமரி – 153
கருர் – 80
கிருஷ்ணகிரி – 227
மதுரை – 276
நாகப்பட்டினம் – 219
நாமக்கல் – 147
நீலகிரி – 43
பெரம்பலூர் – 5
புதுக்கோட்டை – 57
ராமநாதபுரம் – 58
ராணிப்பேட்டை – 114
சேலம் – 275
சிவகங்கை – 54
தென்காசி – 125
தஞ்சாவூர் – 175
தேனி – 92
திருப்பத்தூர் – 59
திருவள்ளூர் – 503
திருவண்ணாமலை – 153
திருவாரூர் – 119
தூத்துக்குடி – 252
திருநெல்வேலி – 309
திரூப்பூர் – 307
திருச்சி – 311
வேலூர் – 229
விழுப்புரம் – 129
விருதுநகர் – 123