June 9, 2026

Seithi Saral

Tamil News Channel

அறுவை சிகிச்சை முடிந்து எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ்

1 min read

Edappadi Palanisamy discharge after surgery

20.4.2021
குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி இன்று டிஸ்சார்ஜ் ஆனார்.

எடப்பாடி பழனிசாமிக்கு அறுவை சிகிச்சை

தமிழக முதல்வர் பழனிசாமி, குடல் இறக்க (ஹெர்னியா) அறுவை சிகிச்சைக்காக நேற்று (திங்கட்கிழமை) சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு முன்னதாக முதல்வருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின் முதல் அமைச்சர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து இருந்தனர். இதனை அடுத்து, இன்று(செவ்வாய்க்கிழமை) முதல்அமைச்சர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வீட்டில் அவர் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *