June 2, 2024

Seithi Saral

Tamil News Channel

தோரணமலையில் இருந்து குதித்து மகளுடன் பெண் தற்கொலை

1 min read

Woman commits suicide with daughter by jumping from Thoranamalai

21.4.2021

தோரணமலை உச்சியில் இருந்து குதித்து மகளுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். தமிழ் மாத கடைசி வெள்ளி தோறும் ஏராளமானோர் மலைமீது ஏறி முருகனை தரிசித்து வருவார்கள்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆசிர்வாதபுரம் பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் தேவபுத்திரன். இவருடைய மனைவி லட்சுமி தேவி (வயது 39), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள்.
இதில் இரண்டாவது மகள் பெயர் மணிசா (7).

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லெட்சுமி தேவி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை கோவிலுக்கு செல்வதாக கூறி மகள் மணிசாவுடன் கோவிலுக்கு வந்தவர்கள் வீடு திரும்பாததால் கணவர் தன் உறவினர்களுடன் சேர்ந்து கோவில் முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை.

இன்று காலை மலை உச்சியில் பெண்ணின் துப்பட்டாவை பார்த்த உறவினர்கள் மலையின் வடபுறம் உச்சியிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் இறந்து கிடப்பதை பார்த்தனர்.
பின் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் மூலம் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
அந்தப் பெண் மலை உச்சியில் இருந்து வடகிழக்கு திசைநோக்கி குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.