நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு
1 min read
Prime Minister Modi has ordered the setting up of 551 oxygen production centers across the country
24/4/2021
நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஆக்சிஜன் பற்றாக்குறை
இந்தியாவில் கொரோன 2-வது அலை படுவேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவரும் சூழ்நிலையில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு உள்ளது. இதனால் உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி மாநிலத்தில் மட்டும் சுமார் 50 வரை ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்ற பிரதமரின் உத்தரவுப்படி, நாடு முழுவதும் 551 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த மையங்கள், பொது சுகாதார வளாகங்களில் அமைக்கப்படும். இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் அந்த மாவட்டங்களுக்கு நாள் தோறும் தேவைப்படும் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.