June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எம்.பி. பதவியில் இருந்து விலகின

1 min read

KP Munuswamy, Vaithilingam MP Resigned

10.5.2021
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை எம்.பி பதவியில் இருந்து பதவி விலகினர். அவர்கள் இருவரும் எம்.எல்.ஏ.வாக நீடிக்க முடிவு செய்துள்ளனர்.

கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் கே.பி முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் இருவரும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் என இரண்டு பதவிகளில் இருந்தால் அவர்கள் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அந்த வகையில் கே.பி முனுசாமி தனது மாநிலங்களவை எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது வேப்பனஹள்ளி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக நீடிக்கிறார்.

அவரைத்தொடர்ந்து வைத்தியலிங்கமும் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ ஆக நீடிக்கிறார்.

இருவரும் தற்போது எம்.பி பதவியிலிருந்து விலகி எம்.எல்.ஏவாக நீடிக்கின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.