தமிழகத்தில் மேலும் 33,658 பேருக்கு கொரோனா: 303 பேர் உயிரிழப்பு
1 min read
Corona for another 33,658 in Tamil Nadu: 303 fatalities
சென்னை,மே.16-
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,658 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 303 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 33,658 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,65,035 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,49,50,403 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 19,449பேர் ஆண்கள், 14,209 பேர் பெண்கள். 20,905 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,39,887 ஆக உயர்ந்தது.
303 பேர் சாவு
303 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 125 பேர் தனியார் மருத்துவமனையிலும், 178பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,359 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்கள் சென்னையில் அதிகபட்சமாக 6640 பேருக்கும், கோவயைில் 3124 பேருக்கும் செங்கல்பட்டில் 2013 பேருக்கும் திருவள்ளூரில் 1551 பேருக்கும், திருச்சியில் 1263 பேருக்கும், திருப்பூரில் 1008 பேருக்கும், நெல்லையில் 661 பேருக்கும், தென்காசியில் 249 பேருக்கும், தூத்துக்குடியில் 896 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் இன்று 82 பேரும், நெல்லையில் 2 பேரும், தென்காசியில் ஒருவரும், தூத்துக்குடியில் ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.