May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

7 பேர் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை

1 min read

The Congress party does not agree with the release of 7 people

21.5.2021
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வதில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். தங்களை விடுவிக்கக் கோரி 7 பேரும் அளித்த கோரிக்கைகள் மீது முடிவெடுப்பதில் ஏற்கெனவே கூடுதலான தாமதம் ஏற்பட்டுள்ளது.

“தமிழக அரசு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, 7 பேருக்கான தண்டனையில் விலக்களித்து உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையிலில் கே.எஸ்.அழகிரி இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உடன்பாடு இல்லை

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக ஜனாதிபதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை. அவர்களுடைய கருத்தை அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுடைய தேர்தல் அறிக்கையிலேயே 7 பேர் விடுதலை பற்றி சொல்லியிருக்கிறார்கள். எங்கள் தேர்தல் அறிக்கையில் நாங்கள் வலியுறுத்தவில்லை.

எனவே எங்கள் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழர்கள் என்ற அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்வதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.