இந்தியாவில் இதுவரை 19.85 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது
1 min read
19.85 crore corona vaccines have been given in India so far
25.5.2021
நாட்டில் இதுவரை 19.85 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை கூறியுள்ளது.
தடுப்பூசி
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசியே சிறந்த ஆயுதம் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இதனால், தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் நடந்து வருகிறது.
19.85 கோடி டோஸ்
நாட்டில் இதுவரை 19.85 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 24.30 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது.