இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கு கீழ் குறைந்தது
1 min read
Daily corona exposure in India is less than 2 lakh
25.5.2021-
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கு கீழ் வந்தது. நேற்று 1.96 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக வேட்டையாடி வருகிறது. அதேநேரம், தினசரி 4 லட்சத்துக்கு மேற்பட்ட பாதிப்புகள் என்று உச்சம் பெற்று வந்த கொரோனா, தற்போது குறைந்து வருகிறது.
இது இன்று சரிந்திருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 2.40 லட்சத்துக்கு மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேர் என்ற நிலைக்கு புதிய பாதிப்புகள் இறங்கியிருந்தன.
இந்த நிலையில், இன்று காலை வெளியிட்ட தகவல்படி 1 லட்சத்து 96 ஆயிரத்து 427 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 69 லட்சத்து 48 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது.
3,511 பேர் உயிரிப்பு
தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 3,511 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 07 ஆயிரத்து 231 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 850 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 86 ஆயிரத்து 782 ஆக குறைந்துள்ளது.