தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது
1 min read
Daily corona exposure in Tamil Nadu is less than 26 thousand
2.6.2021
தமிழகத்தில் இன்று 25,317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 483 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 21 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று மட்டும் 25,317 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,48,346 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனாவில் இருந்து 32,263 பேர் மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,34,439 ஆக உயர்ந்தது.
483 பேர் பலி
தமிழகத்தில் இன்று மட்டும் 483 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,205 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது
சென்னையில் இன்று 2217 பேரும், கோவையில் 3061 பேரும், செங்கல்பட்டில் 996 பேரும், ஈரோட்டில்1488 பேரும், சேலத்தில் 1290 பேரும், திருப்பூரில் 1252 பேரும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 3 பேர் இறந்துள்ளனர். நெல்லையில் இன்று 309 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டவர்களில் 9 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 411 பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர்.