June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

கொரோனா தடுப்பு உபகரணங்கள், கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு

1 min read

Corona prevention equipment, GST for medicine for black fungus. Exempt from the line

12.6.2021-
கொரோனா தடுப்பு உபகரணங்கள், கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கு ஜி.எஸ்.டி.வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

கொரோனா உபகரணங்கள்

கொரோனா சிகிச்சைக்கான உபகரங்கள், கொரோனா தடுப்பூசி, கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து ஆகியவற்றிற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், இதுதொடர்பாக பா.ஜனதா ஆளும் மாநிலங்களுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இதுகுறித்து ஆய்வு செய்து பரிந்துரைப்பதற்காக மந்திரிகள் குழு ஒன்றை ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைத்தது. அந்த மந்திரிகள் குழு, கடந்த 7-ந் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக முடிவு எடுப்பதற்காக, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 44-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது

இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணைமந்திரி அனுராக் தாகூர் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உட்பட மற்ற மாநில நிதிமந்திரிகள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் காணொலி மூலம் பங்கேற்றனர்.

அதன்பின் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு

ஆம்போடெரிசின்-பி மருந்து மீதான ஜிஎஸ்டி நீக்கப்படுகிறது. கொரோனா சிகிச்சைக்கு தேவையான பெரும்பாலான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்து மீதான வரி முற்றிலும் நீக்கப்படுகிறது.

குறைப்பு

கொரோனா சிகிச்சைகான ரெம்டெசிவர் மருந்து மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
பல்ஸ் ஆக்சி மீட்டர் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
சானிடைசர் மீதான ஜி.எஸ்.டி. 18 சதவீதத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
வெண்டிலேட்டர, வெண்டிலேட்டர் மாஸ்க் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
கொரோனா பரிசோதனை கருவிகள் மீதான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைப்பு
உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் மீதான ஜி.எஸ்.டி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும்.
தடுப்பூசி மீதான ஜிஎஸ்டி 5 சதவீதமாக தொடரும்.
மருந்துகள், ஆக்சிஜன் உற்பத்தி கருவிகள், பரிசோதனை கருவிகள் மீதான ஜி.எஸ்.டி. விகிதங்கள் 4 வகைப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.