தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 12,722
1 min read
Today’s corona impact in Tamil Nadu is 12,722
14/6/2021
தமிழகத்தில் இன்று 12,772 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 254 பேர் உயிரிழந்து உள்ளனர்.
குறைந்து வரும் கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 33 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.
இன்றைய கொரோன நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 12,772 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 7,245 பேர் ஆண்கள், 5,527 பேர் பெண்கள்.
இன்று 25,561 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார்கள். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,99,808 ஆக உயர்ந்தது.
254 பேர் சாவு
தமிழத்தில் இன்று கொரோனாவுக்கு 254 பேர் இறந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,801 ஆக அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லை
இன்று சென்னையில் 828 பேருக்கும, கோவையில் 1728 பேருக்கும், ஈரோட்டில் 1295 பேருக்கும், சேலத்தில் 796 பேருக்கும், திருப்பூரில் 781 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று நெல்லையில் 134 பேர் பாதிக்கப்பட்ட நிலைியல் 3 பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 126 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று இறப்பு இல்லை. தூத்துக்குடியில் 250 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2 பேர் இறந்துள்ளனர்.