June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா 2,726 பேர் பலி

1 min read

Corona kills 2,726 out of 60,471 newcomers in India

15/6/2021
இந்தியாவில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 2,726 பேர் பலியாகி உள்ளனர்.

60,471 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. அந்த வகையில் 8வது நாளாக இன்றைய கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

நேற்று 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டநிலையில், மேலும் 3,921 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 75 நாட்களில் குறைந்த அளவாக புதிதாக 60 ஆயிரத்து 471 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 70 ஆயிரத்து 881 ஆக உயர்வடைந்து உள்ளது.

2,726 பேர் சாவு

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,726 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,77,031 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 82 லட்சத்து 80 ஆயிரத்து 472 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 9,13,378 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 90 லட்சத்து 44 ஆயிரத்து 072 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.