June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 62,224 பேருக்கு கொரோனா

1 min read

Corona for a further 62,224 people in India

16-6-2021

இந்தியாவில் இன்று காலை 62,224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிய செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் நேற்று 60,471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு இருந்தது. அதேபோல் 2,726 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை நேரத்தில் புதிதாக 62,224 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 96 லட்சத்து 33 ஆயிரத்து 105 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 2,542 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,79,573 ஆக உயர்ந்து உள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 83 லட்சத்து 88 ஆயிரத்து 100 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 8,65,432 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 19 லட்சத்து 72 ஆயிரத்து 014 ஆக உள்ளது (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,00,458 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது) என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.