தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
1 min read
Districts prone to rain in Tamil Nadu
16.6.2021
தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் மேற்கு பருவக்காற்றின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (வியாழக்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சேலம் ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும்.
நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
ஜூன்19, 20ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.