June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்றைய கொரோனா 9,118 ஆக குறைந்தது

1 min read

In Tamil Nadu, today’s corona has dropped to 9,118

17.6.2021
தமிழகத்தில் இன்றைய கொரோனா 9,118 பேராக குறைந்தது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 27 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 36 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோன நிலவரம் பற்றி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 9,118 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 5,013 பேர் ஆண்கள், 4,105 பேர் பெண்கள்.
இன்று 22,720 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,66,793 ஆக உயர்ந்துள்ளது.

210 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 210 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,548 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் 559 பேருக்கும், கோவையில் 1227 பேருக்கும், ஈரோட்டில் 1041 பேருக்கும், சேலத்தில் 598 பேருக்கும், திருப்பூரில் 542 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை

நெல்லையில் இன்று 87 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இன்று 3பேர் இறந்துள்ளனர்.1390 பேர் தற்போது இந்த மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தூததுக்குடி மாவட்டத்தில் 149 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலைியல் 5 பேர் இறந்துள்ளனர். தற்போது அந்தமாவட்டத்தில் 2266 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தென்காசி 93 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துளார். தற்போது தென்காசியில் 1013 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.