இந்தியாவில் மேலும் 62,480 பேருக்கு கொரோனா; 1,587 பேர் சாவு
1 min read
Corona for a further 62,480 people in India
18.6.2021
இந்தியால் மேலும் 62,480 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை உச்சம் பெற்று தணியத்தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக சீராக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருவது மக்களுக்கு சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.
இந்திய அளவில் கொரோனா நிலவரம் பற்றிய தகவல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 62,480 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,97,62,793 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று காலைவரை ஒருநாளில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 88,977 ஆக உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,85,80,647 ஆக உயர்ந்துள்ளது.
1,587 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,587 ஆக உள்ளது. இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,83,490 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 98 ஆயிரத்து 656 ஆக குறைந்துள்ளது. 73 நாட்களுக்கு பிறகு 8 லட்சத்திற்கு கீழ் இந்த எண்ணிக்கை வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மீட்பு விகிதம் 96.03 சதவிகிதமாக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 3.24 சதவிகிதமாக உள்ளது. 11 நாட்களாக 5 சதவிகிதத்திற்கும் கீழ் உள்ளது.
நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 26,89,60,399 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.