April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-ந்தேதி க்குள் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

1 min read

Supreme Court orders implementation of One Country, One Ration Scheme by July 31

29.6.2921
ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் வெளி மாநில தொழிலாளர்கள், தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை நாட்டில் உள்ள எந்த ரேஷன் கடையில் இருந்தும் வாங்க முடியும். தங்களின் சொந்த மாநிலங்களில் என்ன பெறமுடியுமோ, அவற்றை வெளிமாநில ரேஷன் கடைகளில் இருந்தும் பெற முடியும்.

இந்த நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-ந் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் பணிபுரியும் இடத்திலும், அவர்களின் ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்படாத இடத்திலும் ரேஷன் பெற அனுமதிக்கிறது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் தொடர்பான மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு பல உத்தரவுகளை பிறப்பித்தது.

இதன்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்குவது குறித்து மாநில அரசுகள் திட்டம் வகுத்துக்கொள்ள வேண்டும் என்றும், புலம்பெயர் தொழிலாளர்களின் உணவை உறுதி செய்ய உணவு தானியங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தேசிய தகவல் மையத்துடன் இணைந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத மக்கள் குறித்த கணக்கெடுப்பு செய்து வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தி உள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.