June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 43,071 பேருக்கு கொரோனா தொற்று; 955 பேர் சாவு

1 min read

Corona infection in another 43,071 people in India; 955 deaths

4/7/2021
இந்தியாவில் மேலும் 43,071-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 955 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

கொரோனா 2-வது அலை

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு மக்களை கலங்கடித்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இப்போது தினந்தோறும் வீழ்ந்து கொண்டிருக்கிறது.

கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் சரிவை சந்தித்து வருவது நிம்மதிப்பெருமூச்சு விட வைக்கிறது.

தினசரி தொற்று பாதிப்பும் மீண்டும் சரிவுப்பாதையில் செல்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி 46 ஆயிரத்து 617 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அது நேற்று மேலும் சரிந்து 44 ஆயிரத்து 111 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை மேலும் சரிந்து ஒருநாள் பாதிப்பு 43,071- பதிவாகியுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 43,071 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நேற்றுமுன்தினத்தை விட 2 சதவீதம் இன்று குறைந்துள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 52,299 பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.34 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 350- ஆக உள்ளது.

955 பேர் சாவு

கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 955- பேர் உயிரிழந்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *