இந்திய அளவில் கொரோனா அதிகரிப்பு; 45,892 பேர் பாதிப்பு- 817 பேர் சாவு
1 min read
Corona increase in India; 45,892 people were affected
8.7.2021
நாட்டில் 55 நாட்களாக தினசரி கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் நேற்று முதல் முறையாக குறைந்த அளவில் அதிகரித்து. 45,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில், 43 ஆயிரத்து 733 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 45,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 45,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 55 நாட்களாகக் குறைந்துவந்த தினசரி பாதிப்பு குறைந்த அளவில் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 60 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 784 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 7 லட்சத்து 9 ஆயிரத்து 557 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்த பாதிப்பில், 1.50 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் குணமடைந்தோர் சதவீதம் 97.18 ஆக உள்ளது. 2 கோடியே 98 லட்சத்து 43 ஆயிரத்து 825 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
817 பேர் சாவு
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 817 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 5 ஆயிரத்து 28 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 18 லட்சத்து 93 ஆயிரத்து 800 பேருக்கு கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 42 கோடியே 52 லட்சத்து 25 ஆயிரத்து 897 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் 36.48 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.