June 12, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் கொரோனா 3,211 ஆக குறைந்தது; சாவு 57 பேர் சாவு

1 min read

Corona in Tamil Nadu fell to 3,211; Death 57 deaths

8.7.2021

தமிழகத்தல் கொரோனா பாதிப்பு 3,211 ஆக குறைந்துள்ளது. 57 பேர் இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 48 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 57 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,10,059 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் 3,565 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,43,141ஆக உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் 57 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். . இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,253 ஆக அதிகரித்து உள்ளது.

கோவையில் 366 பேருக்கும், ஈரோட்டில் 251 பேருக்கும், சேலத்தில் 205 பேருக்கும் தஞ்சாவூரில் 190 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், திருப்பூரில் 185 பேருக்கும், செங்கல்பட்டில் 164 பேருக்கும், திருச்சியில் 129 பேருக்கும் இன்று கொனாரோனா உறுதி செய்யப்பட்டது.

நெல்லை

நெல்லையில் இன்று 25 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு இன 3பேர் இறந்துள்ளனர். தென்காசியில் 27 பேர் பாதித்த நிலையில் 3 பேர் இறந்துள்ளனர். தூத்துக்குடியில் 33 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இறப்பு இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *