கொரோனா அதிகம் உள்ள 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
1 min read
Federal letter to 8 states with high corona
8.7.2021
கொரோனா தொற்று அதிகம் உள்ள 8 மாநிலங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
8 மாநிலங்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துவந்த நிலையில் சில இடங்களில் இன்னும் குறையவில்லை. நாட்டில் மொத்தம் 73 மாவட்டங்களில் அதிகபட்சமாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் உள்ளன. நாட்டின் 73 மாவட்டங்களில் 46 மாவட்டங்கள் வட மாநிலங்களை சேர்ந்தவை.
அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், கேரளா, அசாம், மேகாலயா, திரிபுரா, ஒடிசா , சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த மாநில அரசுகளுக்கு, சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
நடவடிக்கை
நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், வாரந்தோறும் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், தொற்று பரவும் வேகத்தின் அறிகுறியையும் கண்காணிக்க வேண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து தனிமைப்படுத்துவது முக்கியம். தொற்றை கட்டுப்படுத்துவதற்கு , தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.