மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தி.மு.க.வில் சேர்ந்தார்
1 min read
Former Vice President of the People’s Justice Center Party Mahendran has joined the DMK
8.7.2021
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.
இணைந்தார்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன். கமல்ஹாசன் கட்சி தொடங்கியதிலிருந்து அவருடன் நெருக்கமாகவும், முக்கியப் பொறுப்பிலும் இருந்தார்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிட்டு, 36 ஆயிரத்து 855 ஓட்டுகள் பெற்றார். ஆனால், தேர்தல் முடிவுகள் வந்த பின், கமலுக்கும், மகேந்திரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து , மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார்.
கடந்த மாதத்திலேயே இவர் தி.மு.க.,வில் சேர்வதாகத் தகவல் வெளியானது. அதை மறுத்து வந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
மு.க.ஸ்டாலின் கருத்து
இதுபற்றி மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-
தேர்தல் அறிவித்த போதே மகேந்திரனை எதிர்பார்த்தேன். கொங்கு மண்டலத்தில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறாதது வருத்தமளிக்கிறது. லேட்டானாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் கிடைத்துள்ளார். முன்பே வந்திருந்தால் தி.மு.க., வெற்றி பெற்றிருக்கும். தற்போது கட்சியில் இணைந்துள்ள மகேந்திரனையும், அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறேன்.
இவ்வாற அவர் பேசினார்.