தமிழக பா.ஜ., தலைவரானார் அண்ணாம
1 min read
Tamil Nadu BJP leader Annamalai
8.7.2021
தமிழக பா.ஜ., தலைவராக உள்ள முருகன், மத்திய இணைஅமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், புதிய தலைவராக அண்ணாமலை இன்று நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை, 2019 இறுதியில், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். பின், புதிய தலைவராக எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் என, பலரது பெயர்கள் கூறப்பட்டன. எதிர்பாராத வகையில், தேசிய எஸ்.சி., – எஸ்.டி., ஆணைய துணை தலைவராக இருந்த முருகன், தமிழக பா.ஜ., தலைவராக, 2020 மார்ச்சில் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில் முருகன் மத்திய இணை அமைச்சராக நேற்று, பொறுப்பேற்றார்.
தமிழக பா.ஜ.,வுக்கு யாரை புதிய தலைவராக நியமிக்கலாம் என ஆலோசிக்கப்பட்ட நிலையில்
இன்று அண்ணாமலையை தமிழக பா.ஜ. தலைவராக தேசிய தலைவர் நட்டா அறிவித்தார்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியான அண்ணாமலை கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கர்நாடகா காவலத்துறையில்10 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2019 ம் ஆண்டு தனது காவல் துறை பணியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.,வில் சேர்ந்தார். கட்சியில் அவர் மாநில துணை தலைவர் பதவி வகித்து வந்தார். கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது அவர் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். தற்போது மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.