கொரோனா தடுப்பூசியால் மூதாட்டிக்கு கண்பார்வை கிடைத்தது
1 min read
The old leady got her eyesight from the corona vaccine
8.7.2021
கண் பார்வையை இழந்திருந்த மூதாட்டி, கொரோனா தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது.
தடுப்பூசி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனாலும், கொரோனா தடுப்பூசி பற்றி பல தவறான கருத்துகள் மக்களிடையே பரவி வருகின்றன. தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டது. கொரோனா 2வது அலை ஏற்படுத்திய பாதிப்பால், பலரும் தடுப்பூசி செலுத்த ஆர்வம் கொண்டுள்ளனர். சில பொதுவான பக்கவிளைவுகள் சிலருக்கு ஏற்பட்டிருந்தாலும், வேறு எந்தவித பாதிப்பையும் தடுப்பூசியால் ஏற்படுவதில்லை.
கண்பார்வை
அப்படியிருக்கையில், கண்பார்வை இழந்த ஒரு மூதாட்டி கோவிட் தடுப்பூசி போட்டப்பிறகு பார்வையை பெற்றுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை ஏற்பட்டு இரு கண் பார்வையையும் இழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்ட அவர், தற்போது கண் பார்வை ஓரளவு மீண்டும் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.