June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 37,154 பேருக்கு கொரோனா; 724 பேர் சாவு

1 min read

Corona for 37,154 newcomers in India; 724 deaths

12-7-2021
இந்தியாவில் நேற்று புதிதாக 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 724 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 37,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,74,376 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 724 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,764 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,00,14,713 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 39,649 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,50,899 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 37,73,52,501 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.