கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை
1 min read
Non-enforcement of corona prevention rules Action against officers
14.7.2021
கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்தாத
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள்
நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பரவல் சற்று தணியத் தொடங்கியுள்ளது. தற்போது தினசரி கொரோனா தொற்றுபாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இந்த சூழலில், வடகிழக்கு மாநிலங்களான அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலாயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டன.
கடிதம்
இந்தநிலையில் நிலையில் மத்திய உள்துறைச் செயலாளர் அஜய்பல்லா மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. எனவே கொரோனா பரிசோதனைகள் முன்பு போல தொடர வேண்டும். பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.
மலைப்பிரதேசங்களில் கொரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் மக்கள் கூடுவது அதிகரித்துள்ளது. சந்தை, சுற்றுலாத்தலம் மற்றும் பொது இடங்களில் கொரோனா விதிகளை மக்கள் கடைப்பிடிப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரிகள்
கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்தப்படாதது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலைத் தடுக்க தேவைப்பட்டால் கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.