June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

காமராஜரின் 119-வது பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

1 min read

Kamaraj’s 119th birthday: In honor of First-Minister MK Stalin

15.7.2021
காமராஜரின் 119-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

காமராஜர் பிறந்தநாள்

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையட்டி பல அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெருந்தலைவர் காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வெள்ளக்கோயில் சுவாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜரின் 119-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் தொடங்கிய பேரணி தி.நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் நிறைவு பெற்றது.
இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மேலிடப்பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, காங்கிரஸ் தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த பேரணியில் காமராஜர் அரங்கில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சார்பில் காமராஜனர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரெங்கசாமி உள்பட பலர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.