August 6, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,872 பேருக்கு கொரோனா;29 பேர் சாவு

1 min read

Corona for 1,872 people in Tamil Nadu today; 29 deaths

22.7.2021

தமிழகத்தில் இன்று 1,872 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த 57 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 71 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று 1,872 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,43,040 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 1,072 பேர் ஆண்கள், 800 பேர் பெண்கள். இன்று 2,475 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,83,676 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 29 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,838 ஆக அதிகரித்து உள்ளது.

நெல்லை

கோவையில் இன்று 180 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும்,சென்னையில் 133 பேருக்கும், சேலத்தில் 113 பேருக்கும், தஞ்சையில் 102 பேருக்கும், செங்கல்பட்டில் 98 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 30 பேருக்கு கொரோனா உறுி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை. தென்காசியில் இன்று 10 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார். தூத்துக்குடியி்ல் 17 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *