நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க.,காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா
1 min read
DMK, Congress MPs Dharna at the Parliament premises
23.7.2021
பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. நேற்று தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள. நாடாளுமன்ற வளாகத்தில் தர்மண போராட்டம் நடத்தினார்கள்.
பெகாசஸ் உளவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ம் தேதி தொடங்கியத. ஆகஸ்டு 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் ‘பெகாசஸ்’ உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
இப்பிரச்சினை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடும்படி வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்ற்ன. கடந்த 4 நாட்களாக எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கி உள்ளது.
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். தர்ணாவில் காங்கிரஸ், தி.மு.க, சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.