July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயதினருக்கு செலுத்த பரிந்துரை

1 min read

FILE PHOTO: A healthcare worker holds a vial of the Moderna COVID-19 Vaccine at a pop-up vaccination site operated by SOMOS Community Care during the coronavirus disease (COVID-19) pandemic in Manhattan in New York City, New York, U.S., January 29, 2021. REUTERS/Mike Segar/File Photo

Recommended to give the Moderna vaccine to 12 to 17 year olds

24.7.2021

கொரோனா தடுப்பூசிகள் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே செலுத்தப்படுகிறது. பைசர் நிறுவன தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் செலுத்தப்படுகிறது.

பல தடுப்பூசிகள் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனைகள்தான் தற்போது உள்ளன.

இந்த நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 12 முதல் 17 வயதினர் 3,700க்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ‘மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம்’ என, அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. இதை அடுத்து இந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.