May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

அமித்ஷாவிடம் அரசியல் எதுவும் பேசவில்லை-டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி

1 min read

No political talk to Amit Shah-Edappadi Palanisamy interview in Delhi

27.7.2021-
நாடாளுமன்ற வளாகத்தில், பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை, அ,தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்தனர். இதில் அரசியல் எதுவும் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே டெல்லி சென்றனர். தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த இருவரும், நேற்று (ஜூலை -26) காலையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். 20 நிமிடங்களுக்கு மேலாக இந்தச் சந்திப்பு நீடித்தது.

பின்னர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ”தமிழகத்துக்கு போதிய அளவு கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கவும், சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு பிரசாரம் செய்ததற்காக நன்றி தெரிவிக்கவும், பிரதமர் மோடியை சந்தித்தோம்,” என தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று பாராளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, மனோஜ் பாண்டியன், தம்பிதுரை, தளவாய் சுந்தரம், ரவீந்தரநாத் உள்ளிட்டோரும் பங்கேற்றதாக தெரிகிறது. தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியில் ரிதியாக பேசவில்லை

பின்னர், எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ‘மரியாதை நிமித்தமாக அமித்ஷாவை சந்தித்தோம். அமித்ஷாவுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. பிரதமர் மோடியுடன் என்ன பேசினோமோ அதைத்தான் பேசினோம்’. இவ்வாறு அவர் கூறினார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.