40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை மீட்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Madurai court orders recovery of 40,000 acres of temple land
30.7.2021
தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக மதுரை ஐகோர்ட்டு கிளை கூறியுள்ளது.
கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை பிறப்பித்த உத்தரவி்ல் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில், 40 ஆயிரம் ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். இதற்காக 2 குழுக்களை நியமிக்க வேண்டும். நிலங்களை மீட்பது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் நீதிமன்றம் கூறியுள்ளது.