நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்னையை விவாதிக்க வேண்டும்; நிதிஷ் குமார் வலியுறுத்தல்
1 min read
The issue of Pegasus should be discussed in Parliament; Nitish Kumar insists
2/8/2021
நாடாளுமன்றத்தில் பெகாசஸ் பிரச்னையை விவாதிக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள நிதிஷ் குமார் வெளியிட்டுள்ள கருத்தால் கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிதிஷ்குமார்
நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என பிகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து நிதிஷ்குமார் கூறியதாவது:-
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கும் துன்புறுத்துவதற்காகவும் இத்தகைய செயல்களை செய்யக்கூடாது. இது குறித்து முழு விவரமும் வெளிப்படுத்த வேண்டும். பெகாசஸ் விவகாரம் குறித்து உண்மை நிலையை அறிய நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்.
விவாதிக்கலாம்
இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பத்தை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க விசாரணை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இந்த விவகாரத்தை விவாதிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிதிஷ்குமாரின் இந்த கருத்து பாஜகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.