June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

1 min read

Tribute to First Minister MK Stalin at Karunanidhi Memorial

7.8.2021
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 3-ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவு நாள்

50 ஆண்டுகள் திமுக தலைவராகவும், 19 ஆண்டுகள் தமிழக முதல்-அமைச்சராகவும், 13 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், கருணாநிதி நினைவு தின நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நடத்த திமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால், கொரோனா 3-வது அலைபரவல் எச்சரிக்கை காரணமாகவும், கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருவதாலும் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளைத் தவிர்த்து அவரவர் வீடுகள் முன்பு கருணாநிதி படம் வைத்து அஞ்சலி செலுத்துமாறு நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முக.ஸ்டாலின் அஞ்சலி

இந்நிலையில், கருணாநிதி நினைவு தினமான இன்று காலை சென்னை மெரினா கடற்கரை அண்ணா நினைவிட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டஅமைச்சர்கள், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம், ஆழ்வார்பேட்டை இல்லம் ஆகிய இடங்களிலும் கருணாநிதி படத்துக்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.