உள்ளாட்சி தேர்தலல்; மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
1 min read
“Must win 100 perceLocal elections; MK Stalin’s advice to district secretariesnt in local elections”
8/8/2021
“உள்ளாட்சி தேர்தல்; 100 சதவீதம் வெற்றி பெற தீவிரமாக உழைக்க வேண்டும்” என்று 9 மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மாவட்டங்களில் தேர்தலை நடத்த மநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயத்தில் அந்த 9 மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட செயலாளர்களுடன் 9 மாவட்டங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலினுடன் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக உள்ளாட்சிதுறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் அறிவுரை
இந்த கூட்டத்தில் 9 மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் உள்ள வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை மாவட்ட செயலாளர்கள்தான் வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து தலைமைக்கு அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்போது கூட்டணி கட்சிகளையும் அனுசரித்து அவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடங்களை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்துள்ள புதிய திட்டங்களை மக்கள் மத்தியில் விளக்கி ஓட்டு கேட்க வேண்டும் என்றும் கூறினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. மற்றும் தோழமைக்கட்சியினர் வெற்றி பெறும் வகையில் கடினமாக உழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
100 சதவீதம் வெற்றி
மேலும் மக்களிடையே நமக்கு இருக்கும் நல்ல பெயரை பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் 100க்கு 100 சதவீதம் வெற்றிபெற வேண்டும். என்று மாவட்டசெயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.