June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் புதிதாக 38,353 பேருக்கு கொரோனா; 497 பேர் சாவு

1 min read

Corona for 38,353 newcomers in India; 497 deaths

11/8/2021

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 ஆயிரத்து 353 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,20,36,511 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 497 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,29,179 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 40,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,12,20,981 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,86,351 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 51,90,80,524 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 41,38,646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.