காதலால் இணைந்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி மதத்தால் பிரிந்தது
1 min read
I.A.S. The romantic couple split up by religion
11.8.2021
காதலால் இணைந்த ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி மதத்தால் பிரிந்தது.
ஐ.ஏ.எஸ். காதல் ஜோடி
கடந்த 2015 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் டீனா டாபி முதலிடம் பெற்றார். அதுவும் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்றார். அதுமட்டுமல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பட்டியல் இனப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். அதே தேர்வில் காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தைச் சேர்ந்த அதார் அமீர் கான் இரண்டாவது இடம் பெற்றார்.
முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி அகாடமியில் ஐஏஎஸ் பயிற்சியின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
அதார் கான் ஓர் இஸ்லாமியர், டீனா டாபி இந்து என்பதே இவர்கள் மீது தேசிய அளவில் கவனம் பெற்றது. இவர்களது காதலுக்கும் திருமணத்துக்கும் எதிராக குரல் எழும்பியது. இந்து மகாஜன் சபா வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது.
திருமண வரவேற்பில் வெங்கையா நாயுடு
அத்தனை எதிர்ப்புக் குரல்களையும் புறந்தள்ளி இந்த ஜோடி கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய மந்திரிகள, மக்களவையின் அப்போதைய சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில், டீனா டாபி, அதார் அமீர் கான் திருமணம் மத வெறுப்புகளும், சகிப்பினமையும் அதிகரித்து வரும் காலத்தில் மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறி இருந்தார்.
பிரிந்தனர்
ஆனால், இந்தத் தம்பதி கடந்த நவம்பர் மாதம் ஜெய்ப்பூர் குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இருவரும் மனமுவந்து ஒருமித்து விவாகரத்து கோரியதால் அவர்களுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.
இவர்கள் காதல் திருமணம் எதனால் முறிந்தது என்ற காரணம் வெளியாகவில்லை. ஆனாலும் மதம்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இவர்கள் திருமண முறிவுக்கு சமூக வலைதலத்தில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டீனா டாபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நீங்கள் என்ன செய்தாலும் யாரேனும் சிலர் உங்களைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு மகிழ்ச்சி சேர்க்கும் விஷயங்களையும் செய்யுங்கள். வாழ்க்கையை வாழுங்கள்” என்று பதிவிட்டு உள்ளார்.