தலிபான்கள் பிடியில் கந்தகார் வந்தது; அதிகாரிகள், போலீசார் சரண்
1 min read
Kandahar came under the control of the Taliban; Officers, police surrender
13.8.2021
ஆப்கானிஸ்தானில் தலிபான் படைகள் முன்னேறி வருகிறது. தலிபான்கள் கந்தகார் நகரை கைப்பற்றினர். இதனால் அதிகாரிகள் சரண் அடைந்துவிட்டனர்.
தலிபான் படைகள்
ஆப்கானிஸ்தானில் ஆளும் அரசுக்கு எதிராக தலிபான்கள் போர் தொடுத்து வருகிறார்கள். அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படை களம் இறங்கியது.
இந்த நிலையில் ஆப்பானிஸ்தானில் இருந்து இம்மாத இறுதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அதில் பல மாகாணங்களை கைப்பற்றி வருகின்றனர்.
கந்தகார்
இந்நிலையில், அந்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான கந்தகாரை கடும் மோதலுக்கு பின்னர் தலிபான்கள் கைப்பற்றினர். இதனால், அந்நகர வாசிகள் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பலர், வீடுகளுக்கு உள்ளேயே பதுங்கி உள்ளனர்.
அதிகாரிகள் சரண்
ஆப்கனின் ஹீரட் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்ததை தொடர்ந்து, அந்நகர கவர்னர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள், போலீஸ் தலைவர், உள்நாட்டு பாதுகாப்பிற்கான துணை அமைச்சர் உள்ளிட்டோர் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் உள்ள தூதரக அதிகாரிகள் மற்றும் தங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாப்பாக அழைத்து செல்வதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் ராணுவத்தை அனுப்பி வைக்க உள்ளதாக அறிவித்து உள்ளன.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, தலிபான்கள் காபூலை கைப்பற்றும் பட்சத்தில், அந்நாட்டு மக்கள் மோசமான விளைவுகளை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.