திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து சாமி தரிசனம்
1 min read
PV Sindhu Sami Darshan at Tirupati Ezhumalayan Temple
13.8.2021
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து இன்று சாமி தரிசனம் செய்தார்.
பி.வி.சிந்து
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் முத்திரை பதித்து விட்டு நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்தன.
சாமி தரிசனம்
இந்த நிலையில் பி.வி.சிந்து சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று வந்தார். பி.வி.சிந்துவுடன் அவரது தாய் விஜயா, தந்தை ரமணா வந்தனர். இதைத் தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து தனது குடும்பத்தினருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயிற்சி அகாடமி
மாநில அரசின் ஆதரவுடன், இளைஞர்களுக்காக விசாகப்பட்டினத்தில் ஒரு பயிற்சி அகாடமியை விரைவில் தொடங்க உள்ளேன். பல இளைஞர்கள் சரியான ஊக்கம் இல்லாததால் விளையாட்டுகளில் பின்தங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.