June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் மேலும் 40,120 பேருக்கு கொரோனா்; 585 பேர் சாவு

1 min read

Corona for another 40,120 in India; 585 deaths

3/8/2021
இந்தியாவில் ஒரே நாளில் 40,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. 585 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா 2-வது அலை

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40 ஆயிரத்து 120 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,21,17,826 ஆக அதிகரித்துள்ளது.

585 பேர் சாவு

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,254 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34 சதவீதம் ஆக உள்ளது.

இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 42,295 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,02,345 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,85,227 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21 சதவீதமாக குறைந்துள்ளது.

தடுப்பூசி

இந்தியாவில் இதுவரை 52,95,82,956 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 57,31,574 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *