July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பாகிஸ்தான் பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது; பிரதமர் மோடி டுவிட்

1 min read

The pains of the partition of Pakistan can never be forgotten; Prime Minister Modi tweeted

14.8.2021-

ஆகஸ்ட் 14- ம் தேதி, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-

பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது. மக்களைப் பற்றி கவலைப்படாத வெறுப்பு மற்றும் வன்முறையால் பல லட்சக்கணக்கான எங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர்,

தங்கள் உயிரிழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்டு 14-ந் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.