தமிழக சட்டசபை மாற்றுத் தலைவர்களாக 4 பேர் பெயர் அறிவிப்பு
1 min read
Announcement of 4 names as alternative leaders of the Tamil Nadu Assembly
16.8.2021
சட்டசபையை நடத்த மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் ,டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவர்.
மாற்று தலைவர்கள்
தமிழக சட்டசபையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. தலைமையிலான அரசின் சார்பில் பட்ஜெட் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து 14-ம் தேதி, சட்டசபை ரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
இந்நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு, தலைவர் இல்லாதபோது சட்டசபையை நடத்த மாற்றுத் தலைவர்களை அறிவித்தார்.
மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் செயல்படுவர் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டசபையின் தற்போதைய சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இருவரும் இல்லாத நேரத்தில், சபையை மாற்றுத் தலைவர்கள் வழிநடத்துவர்.