June 21, 2026

Seithi Saral

Tamil News Channel

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது-ஏன்? நிர்மலா சீதாராமன் விளக்கம்

1 min read

Petrol and diesel prices cannot be reduced – why? Nirmala Sitharaman Description

16-8-2021

பெட்ரோல்- டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைப்பு தற்போதைக்கு இல்லை என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;-

பெட்ரோல்-டீசல் விலை

எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை ஏற்படையதே, ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை.

எண்ணெய் பத்திரம்

1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு காங்கிரஸ் அரசு எரிபொருள் விலையை குறைத்தது. முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல் – டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை.

காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70.195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தி உள்ளது. 2020க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *