உத்தரபிரதேசத்தில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன
1 min read
Schools opened in Uttar Pradesh
16.7.2021-
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து இன்று (திங்கட்கிழமை) 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வருவதைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மருத்துவ குழுவின் அறிக்கையின் படி, ஆகஸ்டு 16-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்’ என, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
இன்று (திங்கட்கிழமை) முதல்வர் யோகி அறிவித்தபடி, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. ’50 சதவீத வருகைப் பதிவுடன் நடைபெறும் வகுப்புகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என, வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு மாணவ மாணவிகள் முக்ககவசம் அணிந்தே வந்தனர். அதேபோல் வகுப்பறையிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. அவர்கள் இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர்.
கல்லூரி
மேலும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி கல்லூரிகளையும் திறக்க உள்ளதாக முதல்வர் யோகி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.