July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

ஐ.எஸ்.ஐ.எஸ்.ல் சேர்ந்த கேரள பெண் ஆப்கனில் விடுதலை; இந்தியச் சட்டப்படி தண்டிக்க தாய் கோரிக்கை

1 min read

Kerala woman freed from ISIS in Afghanistan; Thai demand to be punished under Indian law

19/8/2-21
2017-ல் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமாவை ஆப்கானில் தலிபான்கள் விடுவித்துள்ளனர். அவரையும் அவரது 5 வயது குழந்தையையும் இந்தியா அழைத்து வர வேண்டும் என கேரளாவில் உள்ள அவரது தாய் கூறியுள்ளார். இந்திய சட்டப்படி தண்டிக்குமாறும் கேட்டுள்ளார்.

நிமிஷா பாத்திமா

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பாத்திமா தனது கணவருடன் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்தார். ஆப்கனில் இருந்த போது அவரது கணவர் அமெரிக்காவின் வான் தாக்குதலில் உயிரிழந்தார். கைக்குழந்தையுடன் இருந்த பாத்திமா, 2019-ல் 400 பயங்கரவாதிகளுடன் ஆப்கன் படையினரிடம் சரணடைந்தார். அவரை சிறையில் அடைத்திருந்தனர்.
தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதும் சிறையிலிருந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளை விடுவித்தனர். பாத்திமாவும் குழந்தையுடன் விடுவிக்கப்பட்டார். கேரளாவைச் சேர்ந்தவர்களுடன் அவரை நாடு கடத்த ஆப்கன் அனுமதித்தது.

இந்தியாவிடம் ஒப்படைப்பு

இந்நிலையில் அவரை மீண்டும் தலிபான்களிடம் இந்திய அரசு ஒப்படைத்துவிட்டதாக அவரது தாய் பிந்து சம்பத் கூறியுள்ளார்.
இது குறித்து ஆங்கில டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் “எனது மகளையும், பேத்தியையும் விடுவித்துவிட்டார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் புதன்கிழமை மாலையில், அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை, பயங்கரவாதிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டனர் என்ற வருத்தமான செய்தியை அறிந்தேன்,” என்றார்.

தண்டியுங்கள்

மேலும், “அவள் என் நாட்டிற்கு ஏதாவது தவறு செய்திருந்தால் இந்திய சட்டப்படி தண்டியுங்கள். அதைத்தான் நான் நான்கு வருடங்களாக கூறி வருகிறேன். அவள் ஆப்கானிஸ்தானில் இருந்து நாடு கடத்தப்பட்டால், நான் என் பேத்தியை கவனித்துக் கொள்வேன். இல்லையென்றால் அவள் பயங்கரவாதிகளுக்கு இரையாகிவிடுவாள். 2017-ல் அவள் கோச்சிங் சென்டருக்கு படிக்க போன இடத்தில் பயங்கரவாதிகளாலும், அவளுடன் இருந்த மருத்துவர் ஒருவராலும் மூளைச்சலவை செய்யப்பட்டாள். அப்போது கேரளாவைச் சேர்ந்த 21 பேர் காணாமல் போயினர். அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் அப்துல் ரஷீத் மற்றும் நால்வர்,” என கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.