இந்தியாவில் மேலும் 36,571 பேருக்கு கொரோனா; 540 பேர் சாவு
1 min read
Corona for another 36,571 people in India; 540 deaths
20/8/2021
இந்தியாவில் ஒரு நாளில் மேலும் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 540 பேர் இறந்துள்னர்.
குறைந்து வரும் கொரோனா
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா பற்றி தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் 36,571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 150 நாட்களில் இல்லாத வகையில் மிக குறைவாக நாடு முழுவதும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.54 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது
. ஒட்டுமொத்த பாதிப்பில் 1.12 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரத்து 635 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர் சதவீதம் 97.52 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 524 பேர் கொரோனா சிகிச்சையிலிருந்து குணமடைந்துள்ளனர்.
540 பேர் சாவு
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 540 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 33 ஆயிரத்து 589 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 50 கோடிேய 26 லட்சத்து 99 ஆயிரத்து 702 பேருக்கு மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஒரு நாளில் மட்டும் 18 லட்சத்து 86 ஆயிரத்து271 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏறக்குறைய 57.22 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது