June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய போர் விமானங்களை காக்கும் ‘சாப்’ கருவி அறிமுகம்

1 min read

Introducing the ‘Saab’ device that protects Indian warplanes

19.8.2021
எதிரி நாட்டு ஏவுகணைகளில் இருந்து இந்திய போர் விமானங்களை காக்கும் ‘சாப்’ கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாப் கருவி

இந்திய விமானப்படையின் போர் விமானங்களை பாதுகாப்பதற்காக அதிநவீன ‘சாப்’ என்னும் புதிய தொழில்நுட்ப கருவி உருவாக்கப்பட்டுள்ளது. ஜோத்பூரில் உள்ள டி.ஆர்.டி.ஓ. ஆய்வகம் மற்றும் புனேவில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் எச்.இ.எம் ஆய்வகம் ஆகியவை இணைந்து ‘சாப் கேட்ரிட்ஜ் -118/ஐ’ கருவியை உருவாகியுள்ளன.

ரேடார் மூலம் செயல்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளில் இருந்து, இந்திய விமானப்படையின் போர் விமானங்களை பாதுகாக்கும் வகையில் அதிநவீன முறையில் இந்த ‘சாப்’ கருவியை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. போர் விமானங்களில் பொருத்தப்படும் இந்த கருவியில் சிறு அலுமினியம் அல்லது துத்தநாகம் பூசப்பட்ட நார் துகள்கள் மில்லியம் கணக்கில் அடைக்கப்பட்டிருக்கும்.

தப்பிக்க முடியும்

இது தீப்பிழம்புடன் போர் விமானங்களில் இருந்து வெளியேறி காற்றில் பறக்கும் போது, லேசர் மூலம் செயல்படும் எதிரி நாட்டு ஏவுகணைகளை திசை திருப்பும். இதன் மூலம் எதிரிகளின் தாக்குதலில் இருந்து இந்திய ராணுவ விமானங்கள் தப்பிக்க முடியும். ‘சாப்’ தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக உருவாக்கிய குழுவினரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *