June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மணிப்பூர் மாநில கவர்னராக இல.கணேசன் நியமனம்

1 min read

Ila Ganesan appointed Governor of Manipur

22.8.2021

மணிப்பூர் கவர்னராக பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார். அவருக்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இல.கணேசன்

மணிப்பூர் கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 20-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து, சிக்கிம் கவர்னர் கங்கா பிரசாத் கூடுதல் பொறுப்பாக மணிப்பூர் கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பாரதீய ஜனதா

தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சட்டசபைக்குள் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாட்டின் மீது பாரதீய ஜனதா கட்சியின் மேலித்துக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாலும் எல்.முருகனுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைச் பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கவர்னர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

திருமணம் செய்யாதவர்

இல.கணேசன் ஆர்.எஸ்.எஸ்.சில் பணியாற்றி தொடர்ந்து பாரதீய ஜனதாவின் தேசிய செயலர், துணைத்தலைவர், தமிழக பாரதீய ஜனதா தலைவர், ராஜ்யசபா எம்.பி.என பதவி வகித்துள்ளார்.

தஞ்சாவூரில் 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் நாள் லட்சுமி ராகவன் – அலமேலு தம்பதியின் மகனாகப் பிறந்தார். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும், தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேர செயல்பாட்டாளராக பொதுவாழ்விற்கு வந்தார்.

இவர் தெலுங்கு பிராமண வகுப்பை சேர்த்தவர்.

இவர் பாஜகவின் செயற்குழு உறுப்பினர்களுள் ஒருவர். 1991 இல் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரானார். 2009 மக்களவை தேர்தலிலும், 2014 மக்களவை தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பின்னர் மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு, 6 அக்டோபர் 2016 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இல.கணேசனுக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் “மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.